இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35
குறளைப் படியுங்கள். திருக்குறளை எல்லோரையும் படிக்கச் செய்யுங்கள். ஏனெனில், அது நம்நாட்டின் கருவூலம் (பொக்கிஷம்) ஆகும். உங்கள் வீடெல்லாம் நம் நாடெல்லாம் 'தமிழ் மணம் கமழவேண்டும்'. என்று தமிழர் திருநாளாகிய இந்த நல்ல நாளிலேயே மனமகிழ்ந்து கூறுகின்றேன்.
இதுவரை கூறிய சொற்களால், திருவள்ளுவரின் உள்ளத்தை நான் அறிந்த முறையில் ஒருவாறு விளக்கிக் கூறியுள்ளேன். இப்பேச்சைக் கேட்டவர்களில் சிலருக் காவது வள்ளுவர்மீதும் குறளின்மீதும் பற்றுதல் தோன்றிக் குறளைப் படிக்கத் தொடங்கிவிட்டால், அதுவே எனக்குச் சிறந்த பலனாக இருக்கும் எனக் கூறுவதோடு, "வள்ளுவர் உள்ளம்" பற்றிய எனது பேச்சை இத்தோடு முடிக்கிறேன். வணக்கம்!
வாழ்க தமிழகம்
வளர்க குறள்நெறி!