43
"துன்பம்" என்ற பொருளில் வந்த குறள்கள் 14. அவை 261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303.
"உடற் பிணி" என்ற பொருளில் வந்த குறள்கள் 6: அவை 848, 853, 941, 946, 947, 948.
"காமப்பிணி" என்ற பொருளில் வந்த குறள்கள் 11. அவை 1091, 1147, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301.
"குற்றம்" என்ற பொருளில் வந்த குறள் 1. அது 351.
"வினைப்பயன்" என்ற பொருளில் வந்த குறள் 1. அது 360.
"இன்னா" என்ற பொருளில் வந்த குறள் 1. அது இது.
"இன்னா" என்பது "இனிய" என்பதன் எதிர்மறை, "இன்னாதன" என்பது "இனியதல்லாதவை" என்ற பொருள்பெறும். இது நல்லறிஞர்களாலே எண்ணத் தகாததும் சொல்லத் தகாததும் செய்யத் தகாததுமாம்.
பெருஞ் சிறப்பைத் தருகிற செல்வம் கிடைப்பதாயினும், பெரியோர் பிறர்க்கு இன்னாசெய்யார். பெருஞ் சீற்றத்துடன் ஒருவர் தனக்கு இன்னா செய்தவிடத்தும் அறிஞர் அவர்க்கு இன்னா செய்வதில்லை. தான் ஒரு குற்றமும் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாதவற்றைச் செய்தவர்க்கு இன்னா செய்யாமை இயல்புடையவரது செயல். இன்னா செய்தாருக்கு விதிக்கப்படும் கொடுந்தண்டனை அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்துவிடுவதே. பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதாதவனுடைய அறிவு பயனற்ற அறிவு. இன்னாது எனத் தெரிந்திருந்தும் அதை ஒருவன் பிறருக்குச் செய்வது பெருந்தவறாகும். எப்-