46
விட்டதோ என்ற ஐயமும்கொண்டு. "சாவை விரும்புவதிலும் விரைவாக விரும்புவது ஏன்?" என வினவினேன்.
"என் தந்தையைச் சுவரில் சாய்த்துவைத்து கழுத்தில் கையை வைத்து நெரித்தேன். அப்போது அவரது விழிகள் பிதுங்கின. 'அட பாவிப் பயலே, இதற்காகவா உன்னை வளர்த்தேன்’ என்றார். அவர் வாயிலிருந்து வந்த இதுவே கடைசி சொற்கள். விழி பிதுங்கிய அவரது முகத்தோற்றம் ஒவ்வொரு வினாடியும் என் கண் முன்னே தோன்றிக் கொண்டேயிருக்கிறது. அவரது கடைசிச் சொற்கள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. உண்ண, உறங்க, படுக்க, இருக்க என்னால் முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் கொலைத் துன்பத்திலும் கொடிய துன்பத்தை அனுபவித்துக்கொண்டே யிருக்கிறேன். நான் இறப்பது மூலம் இத்துன்பம் ஒழிந்துவிடும். ஆதவின் சாவை இன்றே, இப்போதே மகிழ்வோடு வரவேற்கிறேன்" என்றான்.
எப்படி? "நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம்" என்ற குறளின் பொருள். "இதனால் நாம் பிறருக்குச் செய்யும் துன்பம் அனைத்தும் பின் நம்மையே வந்து வருத்தும்" என்பது நன்கு விளங்குகிறது. இவ்வுண்மையை நாம் இப்பொழுதுதான் காண்கிறோம். இதனை வள்ளுவர் கண்டு இரண்டாயிரம் ஆண்டுகளாயின. என்னே அவரது அறிவின் திறன்! என்னே அவரது குறளின் பெருமை! படியுங்கள் குறளை மறுபடியும்.
"நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
கோயின்மை வேண்டு பவர்!"
வறுமையால் வாடும் மக்களின் உள்ளத்தையும் நோய் செய்து வாழும் மக்களின் உள்ளத்தையும், வள்ளுவரது உயர்ந்த உள்ளம் நமக்கு நன்கு விளக்குகிறது.