இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
வழங்கும் பணியைப் பாரி நிலையம் மேற் கொள்கின்றது. வள்ளன்மை அதற்கு இயல்பு தானே.
வள்ளுவர் உள்ளம், கி. ஆ. பெ. உள்ளமாயிற்று. அது பலமுக உள்ளமாய் இச்சிறு முதுநூலில் திகழ்கின்றது.
எடுத்த குறள் மணி ஒவ்வொன்றும் புதுப்புது மெருகு பெறுகின்றது. அதன் சொற்பட்டைகள், சிறந்த உரைப் பொலிவால் பன்னிறங் கொண்டு மின்னுகின்றன!
மக்கள் பயன் கொள்வாராக! இறைவன் நிருவருளாலும், திருவள்ளுவப் பெருமான் இன்னருளாலும் இத்திருக்குறட் செல்வர், மேன் மேலும் தமிழ்மறைக் கன்றாகுக.
அழகரடிகள்