பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


தை முதல் நாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுவதின் பொருள் என்ன? தை மாதத்திற்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு? தமிழனுக்கு இந்நாள் மாத்திரம் ஏன் சிறந்த நாள்? என்பதை முதலில் ஆராய்வோம்.

ஒரு ஆண்டை , வான நூற் பயிற்சி வல்லுநர்கள், பகல் அதிகமாக உள்ள பகுதி. இரவு அதிகமாக உள்ள பகுதி என இருபெரும் பிரிவுகளாக வகுத்துள்ளனர். ஆடி முதல் மார்கழி முடிய இரவு காலம்; தை முதல் ஆனி முடிய பகற்காலம், தை பிறந்தால் விடியற்காலை மாதிரி. நேற்றுவரை சூரியன் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இரவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. குளிரும் மக்களை அதிகமாக வருத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு சூரியன் தெற்கு நோக்கியே சென்று கொண்டிருந்ததால் உலகத்தில் இருள் நிறையுமே, பனி வருத்துமே என்று ஏங்கிக்கொண்டிருந்தனர் உலகினர். இன்று சூரியன் திரும்பி வடக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்து, வாடிய மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறான், ஆகவேதான் இது. நன்னாள் -- இதைப் பார்த்துத் தான் தமிழ் மக்கள் இதைத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்; திருவள்ளுவர் தொடர் ஆண்டும் இன்றுதான் தொடங்குகிறது. இன்று ஆண்டின் முதல் நாள், இனி இது எப்படி முதல் நாள் என்று பார்ப்போம். இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்னும் பிரிவினர்க்கு எப்போது நாள் தொடங்குகிறது? இந்துக்களுக்குக் காலை 6 மணிக்கு நாள் தொடங்கிகுறது. முஸ்லீம்களுக்கு மாலை 6 மணிக்கு நாள் தொடங்குகிறது, முஸ்லீம் கன சூரியனுக்கு மாறாகப் பிறையைக் கண்டு, நாள் கணக்கு வைக்கிறார்கள். உதாரணமாக இந்துக்களுக்குத் திங்கள் இரவாயிருப்பது முஸ்லீம்களால் செவ்வாய் இரவாகக் கருதப்படும். கிறிஸ்தவர்கள் முன்னே சொன்ன இரண்டு முறையை