பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு 95 கஞ்சாறர் சோபனப் பெண்கூந்தல் கடிதளிக்கத் துஞ்சு மகிழ்ச்சிகொண்டாய் சோமேசா” என்பது சோமேசா முதுமொழி வெண்பா. வள்ளல்களின் பண்பு அறிதற்கு இரப்பவர் செய் கையே காரணமாகும். இந்த இரப்பாளர் இல்லையா யின், இவ்வுலகில் உள்ள மக்களின் நடமாட்டம் உயிர் இல்லாத மரப்பாவையின் வரவு போக்கிற்கு ஒப்பா கும். கொடுப்பாரும் பெறுவாரும் இல்லையாயின் பாவ புண்ணியம் தெரியா அன்ருே ? இவ்வாறு இரப்ப வர் இல்லாத வானகம் வன்கண் உடையவர்க்கு இருப் பிடம் என்று கூடப் புலவர்கள் கூறியும் விட்டனர்.

வாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன்கண வர்'

என்ற பாடலேப் பாருங்கள். இதல்ை இரத்தலும் ஈதலும் உலகியல்பு என்க. இரப்பர் இல்லையால்ை நாட்டில் தாதாக்கள் இல்லே என்பது பெறப்படும். இரப்பவரால் ஈகையாளர் சிறப்புறுவர் என்பதை, குறிப்பின் உணர்ந்து மொழியாமுன் கொடுப்பார் முன்னின் றிரந்துயிரைத் துறப்ப தின்றிச் சிலர்வாழ்வர் தூய்மை மானம் கெடாமையில்ை இறப்ப உயர்ந்த கொடைமையரே எனினும் இரப்பார் இல்லாக்கால் சிறப்பென் பெறுவர் அவரானே சிறப்பர் காவா தவர்மைந்தா' என்ற பாடலால் வினயக புராணம் அறிவிப்பதை அறியலாம்,