பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு 97 ல்ை அவர்கள் புகழைத் தேடவேண்டும் என்பதற் கும் இந்த அதிகாரத்தை அமைத்துள்ளார் என்க. இரப்பவர்க் ஈயவைத்தார்' என்று அப்பர் கூறும் கருத்து நம்மனத்தில் படிதல் வேண்டும். இரவுத் தொழிலை மேற்கொண்டு வாழலாம் என்பதை வள்ளு வர் சிறப்பாகக் கருதியிருப்பாராயின், இந்த இரவு என் னும் அதிகாரத்திற்கு அடுத்தாற்போல் 'இரவச்சம்' என்னும் அதிகாரத்தைக் கூருர் அல்லரோ அவ்வதி காரத்தில் இரவு எத்துனே இழிவுதரும் என்பதை கன்கு அறியலாம்.