பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 வள்ளுவர் கண்ட அரசியல் முனிசெய் பிணிகட் சிடனின்ரும் முறைகள் பிறழ்ந்து வந்துவிடின் புனித முடைய வயித்தியரால் வழிகின் றவற்றைப் போக்குகவே என்ற வினயக புராணப் பாடலையும் காண்க. உண்ட உணவு செரித்து விட்டது என்று அளவு கடந்தும் அடிக்கடியும் உண்டுவருதல் கூடாது. சீரண மான பிறகும் அளவோடு தான் உண்ணவேண்டும். அப்படி உண்டுவரின், உடம்பு நீண்ட நாளேக்கு அழி வுருதிருக்க வழிகண்டவராவோம். மானிடப்பிறவி கிடைப்பதே அருமை. பல பிறவி எடுத்தபின்பே இவ் வரிய மானுட உடல் கிடைக்கிறது. இந்த உண்மை யினைப் பல நூல்கள் கூறுகின்றன என்ருலும், பிரபு லிங்க லீலை, உடலே விரைவில்அழித்திடாமல் பாது காத்துக் கொள்ளவேண்டும். இதனுல்தான் இம்மை மறுமை வீடு பேறுகள் எய்த இயலும்.” என்பதை புல்மரம் நெளிபுழுப் புள்வி லங்கெனும் பன்மைய துயர்செயும் பவங்கள் தப்பியே வன்மைகொள் கிலமிசை மக்கள் ஆகுதல் நன்மைகொள் உயிர்க்கலால் அரிது கந்தியே என்று ஆனந்தமாகக் கூறுவதைக் காண்க. உடம்பை கன்முறையில் பாதுகாக்க வேண்டு மென்பதற்காகவே திருமூலரும், உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.