பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வள்ளுவர் கண்ட அரசியல் பலராயினும், போரைத் தாங்கும் பொறுப்புச் சேளுதி பதியினைச் சார்ந்ததேள், அது போலக் குடிப்பார்த் தைத் தாங்கவல்ல ஆற்றல் உடையார்க்கே மேலே கூறிய பொறுப்புக்கள் உரியவை ஆகும். இதனுல் ஒரு குடியில் பிறந்த பலரும் நமக்கென்ன? மூத்தவன் பார்த்துக்கொள்வான்' என்று இளையனும், இளேயன் பார்த்துக் கொள்வான்' என்று முதியனும் எண்ணிக் கொண்டு வாளா இருத்தல் கூடாது. எல்லோரும் ஒன்றுகூடி உற்ருர் மேல் வருகின்ற துன்பங்களே வென்று அழிகின்ற நிலையில் உள்ள குடியனே அழி யாது தாங்குதல் வேண்டும். அதுவே பெருமை யாகும். ஈண்டு ஆர்த்தார் (ஆரவாரம் செய்தவர்) எல்லாம் போருக்கு உரியர் அல்லர்' என்னும் பழி மொழியினையும் கினேவில் வைத்துக் கொள்வோமாக. குடியினே உயரச் செய்யும் இயல்புடையவர்கள் சோம்பலேயும் மானத்தையும் கைவிடுதல் வேண்டும். மேற்கொண்ட காரியத்தை விரைந்து செய்தல் வேண் டும். 'தக்க காலம் வரட்டும்” இதுபோது வெயில், மழை, பனி, என்று சொல்லிக்கொண்டு சோம்பி இருக் தாலும், மானத்தை எண்ணி இருந்தாலும் குடி அழி யுமே அன்றி உயராது. பிறர் நல்வாழ்வுற கான்தான பாடுபடவேண்டும்?” என்று எண்ணுதலும் கூடாது. இவர்கள் இன்ப நுகர்ச்சியைக்கூட விரும்பக் கூடாது. பார்த்தீர்களா குடியை உயரச் செய்யப் பாடுபடுகின் றவர்களுடைய பொறுப்புக்களே ! இதனுல் இன்பம் என்பது இவர்கட்கு இல்லே என எண்ண வேண்டா, குடும்பத்தில் உள்ளார்க்கு {