பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானம் 49 என்ற புறநானூற்றுப் பொன் போன்ற அடிகளைக் காண்க. வானவூர்தியில் தேவலோகத்தில் விளங்குவர் என்ருல், அவர்கள் சுவர்க்கத்தை அடைவர் என் பதைச் சொல்லவும் வேண்டுமோ? வேண்டா அன்றே: மானத்தை நிலைநிறுத்த வறுமையை அடக்கித் தம் ஈகைப் பண்பில் தளராது வாழ்ந்தனர் மக்கள் என்பதைப் பெருங்கதை என்னும் நூல், ' செல்வப் பெரும்புனல் மருங்கற வைகலும் கல்கூர் கட்டழல் நலிந்துகை அறுப்ப மானம் விடல் அஞ்சித் தானம் தளராக் கொள்கையொடு சால்பகத் தடக்கிக் கன்னி காமம் போல உள்ள இன்மை இயையா இடுக்க ணுளர் ' என்று கூறுகிறது. இத்தருணம் கந்தபுராணம் கழறுவதையும் 5ம் சிந்தனைக்குக் கொண்டு வருதல் தக்கதாகும். கூளுெடு வெதிரே பங்கு குருடுபேர் ஊமை ஆனேர் ஊனம தடைந்த புன்மை யாக்கையோ டழியும் அம்மா மானம தழிந்து தொல்லை வலியிழந் துலகில் வைகும் ஏனேயர் வசையின் மாற்றம் எழுமையும் அகல்வதுண்டே என்பது அக்கக்தபுராணப் பாடல். கூன், செவிடு, முடம், குருடு ஊமையோடு பிறந் தாலும், அப்பிறவியின் இழிவு உடல் இறந்தவுடன், அழியும், ஆனல் மானம் அழிந்தால் பழி ஏழ் பிறவி யிலு தொடர்ந்து கிற்குமே என்று இப்பாடல் கூறு மானுல், மானத்தை எந்த அளவு போற்றவேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டாவா ஆகவே, காட்டு மக்கள் மானமுடையவராய் இருத்தல் இன்றியமை யாதது. 令