பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வள்ளுவர் கண்ட அரசியல் இத்தகைய பெருமை ஒருவனுக்கு எப்போது வரும் ஒருமனப்பட்ட மகளிர் தம் மனத்தைப் பல ாறு சிதரவிடாமல் இருந்து, தம் கற்பைக் காத்துக் கொள்வது போல, ஒரு மனிதன் தன் நிறையினையும் தவருமல் காத்துவந்தால்தான் உண்டாகும். அதா வது காக்கவேண்டுவனவற்றைக் காத்துக் கடிவன வற்றை நீக்கி ஒழுகுதல் என்பதாம். சுருங்கக் கூறின், மனமொழி மெய்களே அடக்கி உபகாரம் முதலியவற் இறைச் செய்து வருதல் எனலாம்.

  • வாயில் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற

செய்கை அடங்குதல் திப்பியமாம் பொய்யின்றி கெஞ்சம் அடங்குதல் வீடாகும் இம்மூன்றும் வஞ்சத்தில் தீர்ந்த பொருள் ” - என்பது திரிகடுகம். வறுமை யுற்றகாலத்திலும், பிறரால் செயற்கரிய செயலைச் செய்ய வல்லவரே பெருமை அடைவர். இங் கனம் செய்பவரே சால்புடைய மக்கள் ஆவார். ' இசையும் எனினும் இசையா தெனினும் வசைதிர எண்ணுவர் சான்ருேர் ’’ என்பது காலடியார்.

  • சிறுமுயற்சி செய்தால் குறுபயன் கொள்ளப்

பெறுமெனில் தாழ்வரோ தாழார் -அறனல் ல எண்மைய ஆயினும் கைவிட் டரிதெனினும் ஒண்மையில் திர்ந்தொழுக லார் ' என்ற நீதிநெறி விளக்கச் செய்யுளேயும் ஈண்டு நினைவு கூர்க.