பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை வில்லைதாம் வாழு நாளே." என்பது புறநானூற்றுச் செய்யுள் (188). ஈண்டுரைத்த குறளின் விளக்கமே இப்புறச் செய்யுள் என்றால் பொருந்தும்.' 5. மக்கள்மெய் திண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (பதவுரை) மக்கள் - தம் பிள்ளைகளுடைய, மெய்உடம்பினை, தீண்டல்-தொடுதல், உடற்கு இன்பம் - (பெற்றோர்களின்) உடலுக்கு இன்பமாயிருக்கும், மற்று - பின்பு, அவர் - அப்பிள்ளை களுடைய, சொல் கேட்டல் - இனிய (மழலை) சொற்களைக் கேட்டல், செவிக்கு இன்பம் - காதுக்கு இன்பமாயிருக்கும். மக்கள் மெய் தீண்டல் என்பதற்கு, பிள்ளைகள் பெற்றோருடைய உடம்பினைத் தீண்டுதல் என்றும் பொருள் கொள்ளலாம். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : . (மன. உரை) தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற்கு இன்பமாம்; அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பமாம். (பரி. உரை) ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். (தெளிவுரை) குழந்தைகளின் உடலைத் தொடுதல் பெற்றோர்களின் உடலுக்கு இன்பம். அடுத்து அவர்தம் சொற்களைக் கேட்டலோ காதுக்கு இன்பமாம். வள்ளுவர் கண்ட மனையறம் 6 3