பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

106 தவிக்கின்றனர். இதன்ை வாய்ப்பேச்சு என்று வாளா இருந்துவிடாமல் பழக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்யுங்

  1. ©YᎢ .

ஒரு சிறு கவலையோ - மனம் கலங்கும் சமயமோ - வேதனைப்படும் சந்தர்ப்பமோ ஏற்பட்டபொழுது இன்பம் அடைந்த முந்திய நினைவுகளை எண்ணிப் பாருங்கள். அப் பொழுது இன்பமும் துன்பமும் இயற்கை என்பது புலப்பட்டு விடும். இதனையறியாத ஒரு சிலர், அடடா, என்னுடைய கவலையினை நான் என்னவென்று கூறுவேன்...' என்று பேசுகின்றனர். உலக அனுபவம் நிறைந்த மக்கள் அறிவு நிறைந்திருந் தால் அங்கு - அந்த மனமுடையவனிடத்தில் இடுக்கண் (துன்பம்) என்பது ஆட்டம் போட முடியாதே! வெள்ளத் தைப்போல மேலும் மேலும் வந்துகொண்டே இருந்தாலுங் கூட, துன்பங்கள் அறிவுடையவன் நினைத்துப்பார்த்தால் கெட்டோடிப் பறந்துவிடுமன்றோ! வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். வெள்ளம் - வெள்ளத்தினை, அனைய - போன்ற, இடும்பை - (கரையில்லாத) துன்பம் எல்லாம், அறிவுடையான் - அறிவுள்ளவன், உள்ளத்தின் - தனது மனத்தினில், உள்ள - ஒன்றினை நினைக்க, கெடும் - அப்போதே கெட்டுவிடும். இந்த அறிவுரையினைத் தழுவி வாழ்க்கை நடத் துங்கள். அறிவு - எண்ணம் - முயற்சி - ஊக்கம் இவைகளே முன்னேற்றந்தரும் படிகளாகும். 一★一