பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

11 I

மறவாதீர்கள். இந்த அளவென்னும் நாணம் மகளிர்க்கு இருந்து நடவாவிடில் உலக வாழ்க்கைமுறை நன்கு நடவாத தாகிவிடு மென்றும் அறிவீர்களாக, கருமத்தால் நானுதல் நாணுத் திருதுதல் நல்லவர் நாணுப் பிற. நானு - நன் மக்களது நாணமாவது, கருமத்தால் - இழிவான செயல்கள் செய்வதற்கு, நாணுதல் - நாணம் அடைவதாகும், பிற - மற்ற, மனம் மொழி செயல் உண்டாகின்ற நானம், திருதுதல் - அழகிய நெற்றியினையுடைய. நல்லவர் - மேலான நன்மகளிர், நானு - நாணம் என்பதாகும். இக் குறளறத்தினைப் போற்றிப் பழகிக்கொள்ளுங்கள். ஆடவர்கள் கருமத்தில் (செயல்களில்) நாணம் என்பதைக் கொள்ளுதல் வேண்டும். இதனைச் சற்று முன்னர் கூறி னேன். திருநுதல் நல்லவர்கள் (பெண்கள்) மற்ற எல்லா முறைகளிலும் நாணத்தைக் கடைப்பிடித்தல் வேண்டுவ தாகும். கணவனும் மனைவியுமாக இருந்து வாழும் வாழ்க்கை யில் இருபாலர்க்கும் இன்பம் தருவதாக இருப்பதுதான் தலைவனும் துணைவியுமாக இருந்து வாழ்வதாகும். ஆணுக் குத்தான் பெண் துணை யென்பது இயற்கையோடிசைந்த பெரும் உண்மையாகும். கணவன் மனைவியைப் போற்றிக் காத்து வாழ்தல் என்பது இன்றியமையாக் கடமையாக அமைந்திருப்ப தாகும்.