பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 குலமகளிர் - கருமம் செய்தல், அதாவது செயல் புரிதல் என்பது எத்தகைய மேன்மையானதாகும் என்பதை இக்குறட்பா கூறுகின்றது. செயல் புரியாத மக்கள் சிறந்து வாழ்தல் முடியாததாகும். நாணத்தினை மேற் கொள்ளாத மக்கள் இழிதொழில் செய்யவும் முற்படுவர் என்பது குறிப்பாகும். நாணமில்லாமல் தொழில் புரிகின்ற மக்கள் மனம் போன போக்கில் எல்லாம் செயல் புரிவார்களாதலால் மனிதப் பிறவிக்குக் கீழான பிறவிகளின் தன்மையினை அடைவர் என்பதாகும். குலமகளிர் வேறு விலை மகளிர் வேறு என்பதனைப் பிரித்துக் காட்டவே திரு துதல் நல்லவர் எனறு குறட்பாவில் அமைத்தார். நாணம் உள்ளவர்கள் பொதுவாகவே நல்லவர் களாக இருப்பார்களென்பது பொ துப்படையான உண்மையாகும். கருமம் செய்தல் என்பது தன்னையும் சுற்றத்தினையும் உயர்த்திக் கொள்ளும் கிலையில் ஒருவனை நிறுத்துவதாகும். செயல்புரிவதை என்றும் கைவிடமாட்டேன் என்று கூறுகின்ற பெருமைதான் கன்மகனுக்கு அடையாளமாகும். - முயற்சியே பெருமை அப்படி கினைக்கின்ற முயற்சிப் பெருமையினைப் போல் மேன்மையுடைய பெருமை வேறெதுவுமே இல்லை. எண்ணுதல், சொல்லுதல், செயல்படுதல் என்கின்ற முறைகள் உண்டு. அவைகளில் செயல் படுதல் என்பதுதான் மக்களை முன்னேற்றமடையச் செய்யும் ஊன் றுகோலாகும். - -