பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 செயல்படுகின்ற பொழுது பல இடையூறுகள் குறுக்கிடுதல் உண்டு. ஆதலால் செயல்புரிவதைக் கைவிடமாட்டேன் என்று கூறும் பெருமை சிறப்பிக்கப் பட்டது. முயற்சி என்பது முடிவில் பெருமையினை அளிக்கும். - - ஆகையால் முயற்சியே பெருமை என்று கூறப் படுகின்றது. அப்பெருமையினைவிட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்பதாகும். கருமம் செய ஒருவன் கைதுவேன்’ என்பதாகக் குறட்பா எடுத்துக் கூறி தொடங்கப் பெறுகின்றது. ஒருவன் செயலினை மேற்கொள்ளுவானேயானால், அச்செயல் அவனுக்கு மட்டுமேயன்றிப் பிற குடி மக்களுக்கும் உயர்வைத் தருவதாகும். ஆதலால்தான் கருமம் செயப் புகுந்தவன் மிகப் பெரியவனாகக் கருதப்படுகின்றான். - கைவிடமாட்டேன் எவ்விதமான இ ன் ன ல் க ள் வந்தாலும் - இடையூறுகள் நேரிட்டாலும்தான் கொண்டசெயலினைக் கைவிடவே மாட்டேன் என்கிற உறுதிப்பாட்டினைக் கைதுவேன்’ என்ற சொல் விளக்குகின்றது. அத்தகைய பண்பு நிறைந்த மக்கள் அரிதாக இருப்பார் களானபடியால்,இத்தகைய பண்பாளர்கள் சிறப்பிக்கப் படுதல் வேண்டும். கருமம் செய்தல் என்பது பெருமுயற்சியினால் எழுகின்ற எண்ணமாகும். ஆதலால்தான் இவ்வாறு: கூறப்படுகின்ற பெருமையினைவிடச் சிறந்த பெருமை. வேறு எதுவுமே இ ல் ைல ெய ன் று குறட்பா