பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 கூறுகின்றது. கருமம் செய ஒருவன் கைதுவேன் என்னும்-பெருமையில் பீடுடையது இல். . இக்குறட்பாவில் முயற்சியினைப் பெருமை என்ற சொல். குறிக்கின்றது. முயற்சியைப் பெருமைஎன்ற சொல் குறித்தது முயற்சியே பெருமைக்கு அடிப்படை யானதாகும் என்பது குறிப்பு. இக்குறட்பா பீடுடையது இல் என்று முடிகின்றது. கைவிடமாட்டேன் என்று கூறுகின்ற பெருமை யினைவிட மேம்பாடுடைய பெருமை அவனுக்கு வேறு. எதுவுமே இல்லை என்பதாகும். முயற்சியில்லாதவர்கள் கபீடு அடைதல் முடியாததாகும். மன உறுதி இல்லை : யென்றால் கருமத்தினைத் தொடர்ந்து செய்தல் அரிதாகும். - - - முயற்சியே உயர்ச்சி சொல்லுதல் யார்க்கும் எளிதானதாக இருக்கலாம். ஆனால் செயல்படுதல் என்பது எளிதானதாக இருக்க முடியாது. அவ்வாறு செய்யப்படுகின்ற பொழுது, வருகின்ற துன்பங்களைத் தாங்கிவிடாமல் தொழில் செய்வது அரிதிலும் அரிதாகும். . ஆதலால்தான்" கைதுவேன்"என்கின்ற எண்ணம் சிறப்பிக்கப்பட்டது. செல்வமும் புகழும் கருமம் செய்தலினால்தான் அடைதல முடியும்;அச்செயல் தனக்கும் சுற்றத்திற்கும். உயர்வினைத் தரும். ஆதலால் அரிதிலும் அரிது’ என்று சொல்வதைப் போலப் பெருமையிலும் பெரும்ை' אייל. என்று அமைத்து வைத்தார்.