பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தொழிலின்ை மேற்கொண்டு செய்தல் மிகுதியும் போற்றப்படுவதாகும். தொழில் செய்தல் என்பது கமனத்திட்பம், வினைத்திட்பம் என்ற இப்படிப்பட்ட .பலவித நுட்பங்களைக் கொண்டதாகும். இன்பமும் துன்பமும் இரண்டும் இயல்பே! முடிவில் இன்பத்தைத் தரக்கூடிய தொழில்கள் முதலில் துன்பத்தினைத் தருதலும் உண்டு. செயல் :பட்டுத் தொழில் புரிகின்றபொழுது இடையூறுகள் வராமலிருக்குமென்று சொல்லிவிடமுடியாது. ஆதலால் தான் தொழில் புரிபவர்கள் துணிவு மிகுதியாகக் கொண்டிருத்தல் வேண்டும். . . . துணிவு என்பது பலர்பால் காணமுடியாததாகும் ஆதலால்தான் துணிவு பெற்றவர்களைப் போற்றுதல் வேண்டும். அத்துணிவுடன் செயல் புரிபவர்களை மிகுதி வயும் பாராட்டிப் போற்றுதல் வேண்டும். இன் பத்தினைத் தருகின்ற செயல்களையே செய்தல் அறிவுடையோர் செயலாகும். ஆதலால் அறிவு, .கிறைந்தவர்களே செயலில் ஈடுபடுவார்களென்பதும் குறிப்பாகும். துன்பத்திற்கு அஞ்சுபவர்கள் செயல் புரிதல் முடியாது; பல நேரங்களில் தொழிலினை மேற் கொண்டு கடக்கும் பொழுது தொடர்ந்த முறையில் துன்பம் வருதலும் உண்டு. அப்பொழுதெல்லாம் மனம் கலங்குதல் கூடாது. எக்காரணத்தினாலும் மனம் கலங்காமல் வலிமையுடன் செயல் புரிதல் வேண்டும் என்ற கருத்தினை துணிவு ஆற்றி என்ற சொற்களினால் கூறுகின்றார். நல்ல முறையிலே .ெ ச ய் ய ப் பூ டு கி ன் ற தொழில்கள் இன்பத்தினைக் கொடுக்கும். -