பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 துணிவு இன்பம் தரும் ஆதலால் இன்பம் பயக்கும் வினைகளைத். துணிந்து செயற்படுத்துதல் வேண்டும். துன்பத். தினைத் தருகின்ற வினைகள் கிறைந்த இன்பத்தினைக் கொடுக்கும். ஆதலால், இன்பத்தினைக் கொடுக்கும். தொழில்களையே மனத்திட்பமும் வினைத் திட்பமும் கொண்ட மக்கள் செய்வார்கள். -

  • தொழிலை மேற்கொண்டு செய்கின்ற பொழுது மாறுபட்ட எண்ணங்கள் கொண்டவர்களாலும் பகை வர்களாலும் பிற சூழ்நிலைகளாலும் துன்பங்கள் வரும். அத்துன்பங்கள் தொடர்ந்து வருதலும் உண்டு.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிட் இன்பம் பயக்கும் வினை’ என்று அமைக்கப்பட்டுள்ள குறட்பா மிகச் சிறந்த நுட்பமான பல திறப்பட்ட பேருண்மைகளைக் கொண்டுள்ளது. - - - முயற்சியிடையே ஏற்படும் துன்பம் சிறிது காலத் திலேயே நீங்கிவிடுவதாகும். அதனால் கலக்கம் அடை தல் கூடாது. நிலைபெற்று வருகின்ற இன்பத்தினை கோக்கியே செயல் புரிதல் வேண்டும். ஆதலால்தான் துணிவாற்றிச் செய்க என்று வற்புறுத்திப் பேசினார். இக்குறட்பாவில் உற' என்ற சொல்லினைச் சிந்தித்தல் வேண்டும். ". - ན་ག་ ་ சில நேரங்களில் துன்பங்கள் மீண்டும் மீண்டும் வருதல் உண்டு. அப்படி வந்தாலும் கலங்குதல் கூடாது. ஆதலால்தான் உறவரினும் என்றும் குறிப்பிட்டார். இவைகளுக்கெல்லாம் மனத்திட்பம்" மிகவும் தேவையென்பது குறிப்பால் உணர்த்தப் பட்டது. - . . . . -