பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மனத்திண்மையே உறுதியாகும் மன உறுதி என்று கூறப்படுகின்ற மனத்தின் திண்மை எக்காலத்திலும் கலக்கத்தினை நீக்கி மனத் தளிர்ச்சியினைப் போக்கும். மனம் தளர்ச்சியடையாமல் இருந்தால் மேலும் மேலும் மன எழுச்சியுண்டாகும். மனஎழுச்சியும் மனத்திட்பமும் தளர்ச்சியடையாத கின்லயினை நிலையுறுத்தும். எண்ணிய பெருமைக்கும் சிறப்பிற்கும் அழிவு வந்த காலத்திலும்கூட மன எழுச்சியுடையவர்கள் தம்முடைய பெருமையினை கிலைநிறுத்திக் காட்டு வார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் மன்த்தில் உரம் சிறந்து விளங்கும். உரம் சிறந்து விளங்குபவர் களை உரவோர் என்று குறிப்பிடுவோம். மனஉரம்" என்பதுதான் மனத்தில் இருக்கின்ற ஊக்கம் என்ப தாகும். ஊக்க மி ல் லா த வர் க ள் எக்காலத்திலும் சிறப்படைய மாட்டார்கள். - வாழ்க்கையில் கெடுதல் வருகின்ற காலங்கள் உண்டு. அப்படிப்பட்ட காலங்களில் தளர்ச்சியடையாத பண்பினை உரம் என்று கூறப்படுகின்ற மன ஊக்கம் கொடுத்தே தீரும். யானையினிடம் காணப்படுகின்ற சிறந்த குணங் . களில் ஒன்று தளர்ச்சியடையாமல் பெருமையினை கிலைநிறுத்துவதாகும். அம்பினால் தாக்கப்பட்டுப்புண் பட்ட காலத்திலும் யானையானது தளர்ச்சியடையாமல் பெருமையினை நிலைகாட்டி நிலைத்து நிற்கும்.