பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 0:0 சிறப்பும் மனத்தில் ஊக்கம் கொண்டுள்ள மக்களுக்கு பொருந்துவதாகும். ஊக்கமுள்ளவர்கள் உயர்ச்சியடை வார்கள். 'தளர்ச்சியே கூடாது ஊக்கமுள்ளவர்கள் எப்பொழுதும் மன் எழுச்சி யினைப் பெற்றிருப்பார்கள். மன எழுச்சியும் ஊக்கமும் இல்லாதவர்கள் மக்கட்பிறவியின் மனிதப் பண்பாட் டினை இழந்தவர்களாவார்கள். உள்ளம் என்பதே ஊக்கத்தின் இருப்பிடமாகும். ஆதலால் ஊக்கமில்லா தவர்களை உள்ளமில்லாதவர்கள் என்று கூறுதல் மிகையாகாது. - - - ஊக்கம் என்பது மனதில் உரத்தினை உண்டாக் கும். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் கினைத்த சிறப். பிற்கு அழிவு வந்த காலத்திலும் தளர்ச்சியடைய மாட் டார்கள். தம்பெருமையினையே நிலைநிறுத்துவார்கள். மன எழுச்சியுள்ளவர்கள் தளர்ச்சியடைய மாட்டார்கள் என்கின்ற கருத்தினை உரவோர் ஒல்கார்’ என்று. குறட்பா கூறுகின்றது. ... " - - எப்படிப்பட்டவர்களுக்கும் சிதைவு என்பது பல காரணங்களால் ஏற்படுவதுஉண்டு. இதனை அழிவைத். தருகின்ற நேரம் என்றும் கூறலாம். அப்படித்தான் கொள்ளுதலும் வேண்டும். அப்படிப்பட்ட காலத்தில் ஊக்கம் நிறைந்தவர்கள் தளர்ச்சியடையமாட்டார்கள்t ஊக்கம் என்பது மனத்தில் உரம் என்கின்ற. வலிமையினை, அதாவது மன எழுச்சியினை உண் டாக்கும். ஆதலால் தளர்ச்சி என்பது எப்பொழுதுமே வராது. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் என்று. குறட்பா தொடங்கப் பெறுகின்றது. . *