பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 02 லினைச் செய்து முடித்தால் இன்பம் என்பது தானா கவே வந்து சேரும். செயல் புரிந்து அதனையே விரும் பும் கலலவர்கள் தங்களைச் சூழ்ந்திருக்கின்ற சுற்றத் தார்களின் துன்பத்தினையும் நீக்குவார்கள். இன்பத் தினை விரும்பிச் செயல் செய்தலை விரும்பாதவர்கள் பயனற்றவர்களாகி விடுவார்கள். - - தனக்கும் சுற்றத்திற்கும் துன்பத்தினை நீக்குபவர் கள் செயல் புரி வோர்களே ஆவார்கள். செயல் புரிபவர்கள் என்பது தளராத முயற்சியினையுடைய வர்கள் என்பதாகும். அப்படிப்பட்டவர்கள் வினை செய்தலையே அதாவது, தொழில் செய்வதையே விரும்புவார்கள். அத்தகைய விரு ப் பத் தி ைன ஆள் வினையுடைமை என்று கூறப்படுகின்ற முயற்சி அளிப்பதாகும். - ஊன்றும் தூண் வறுமையினைத் தீர்ப்பதும் தன்னைக் காப்பதும் முயற்சியுடையவர்களால்தான் முடிவதாகும். ஒருவன் அத்தகைய பண்பாட்டினைப் பெற்றிருந்தால் அவன் தனக்கு மட்டுமன்றித் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துன்பத்தினை நீக்குபவன் ஆகின்றான். அப்படிப்பட்ட வனைத் கது.ாண்” என்று ஆசிரியர் வள்ளுவனார் கூறுகின்றார். - f தூண் வலிமையுடையது என்பது மட்டுமல்ல, - பலவற்றினையும் தாங்கிக் கொண்டிருக்கின்ற பெருஞ் செயலின்னத் தூண் செய்கின்றது. எனவே, முயற்சி யுடையவன் வினை செய்தலையே எப்பொழுதும் விரும்பிச் செய்வான். அப்படிப்பட்ட ஒருவனை வினை விழைவான்’ என்று குறட்பா கூறுகின்றது. -