பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மேற்கொண்ட செயலினை விட்டுவிட கினைப்பவர் களும் உண்டு. ஆதலினால் எப்பொழுதும் மனத்திட்பம் உடையவர்களாக விடாத முயற்சியினை மேற். கொண்டால் எடுத்த தொழில் முடிவு பெறும் கல்ல பயனைத் தரும். எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும். ஆதலால்தான் இடும்பைக்கு இடும்பை படா அதவர் என்று குறட்பா கூறுகின்றது. அதாவது வினை மேற்கொண்டு செயல் புரிவோர்கள் துன்பம் வந்தால் துன்பப் பட்மாட்டார்கள் என்பதே கருத்தாகும், இடும்பை வந்த பொழுது அதற்கு இடும்பைப் படா அதவர்கள் எடுத்த தொழிலில் வெற்றி பெறுவர் என்பது திண்ணமாயிற்று. அவர்களுடைய திறமை வந்த இடும்பையின்ை ஓடிவிடச் செய்யும். அப்படிப்பட்ட உள்ளம் படைத்தவர்களிடம் இடும்பை வருவதற்கும் அஞ்சும். அப்படி அவர்களிடம் வந்த துன்பத்திற்கு இவர்களே துன்பத்தைக் கொடுத்து விரட்டிவிடுவார்கள் என்பதாகும். இடும்பைகள் இயல்பேயாகும் இடும்பைக்கு இடும்பை படுப்பர்’ என்ற சீரிய உண்மையினை முதலாக வைத்து குறட்பா தொடங்: கிற்று. தொழிலினை மேற்கொண்டு வருகின்றவர்கள் இடையிலே வருகின்ற துன்பத்திற்கு அஞ்சாமலிருந்து வந்த அத்துன்பத்திற்கு வேறொரு துன்பத்தினை உண்டாக்குவார்கள். * . . . துன்பத்திற்கு வருந்துகிறவர்கள் இப்படிப்பட்ட .ெ ச ய லி ைன ச் செய்யமாட்டார்கள். இடும்பை