பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 0.8 அல்லது பற்பல வகையான இடுக்கண்கள் கலந்து வருதலும் உண்டு. அடுக்கடுக்காக மேலும் மேலும் இடுக்கண்கள் வருதலும் உண்டு. இடைவிடாமலேயே இடுக்கண்கள் வருதலும் இயல்பாகும். ஆதலினால், காலத்தினாலும் அளவினாலும் துன்பத்தினை அளந்து அறிந்து பார்த்தல் கூடாது. எப்படிப்பட்ட வகையில் துன்பங்கள் வந்தாலும் தன்னுடைய மனத்தின் ஊக்க மிகுதியால், எழுச்சியின் சிறப்பால் குறிப்பினையும் கொள்கையினையும் விடாமல் இருப்பவன் அஞ்சுதல் இல்லை. - எடுத்த கோட்பாட்டினை விடாது பற்றிப் பிடித்து வெற்றியில் நாட்டங் கொள்ளுதலே அறிவுடைமை யாகும். அப்படிப்பட்டவனுக்கு எக்காலத்திலும் இழிவோ அழிவோ வராது. . - - அப்படிப்பட்டவனை அழிவிலான்’ என்று ஆசிரியர் வள்ளுவனார் கூறுகின்றார். உள்ளத்தில் உறுதியாகக் கொண்டுள்ள குறிக்கோளினை விடா திருப்பவனுக்கு எக்காலத்திலும் அழிவுத் துன்பம் நெருங்கிவிடாது. - - - இடுக்கண்கள் பல நெருங்கி வந்தாலும் திண்மை யான உறுதிப்பாடு உள்ளவனிடம் வந்த அந்தத் துன்பங்கள் தாமே துன்பப்படும்படி செய்துவிடுவான். இடுக்கண் இடுக்கட் படும் என்று ஒரு குறட்பா முடிகின்றது. & - - துன்பம் தானே துன்பத்தினை அடையும் என்பதே இதன் பொருளாகும். இப்படிப்பட்ட் கிலைமை அத் துன்பத்திற்கு எப்பொழுது உண்டாகும் என்பதனை விளக்கவேண்டியே அழிவிலான் உற்ற இடுக்கண்