பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ஊக்கத்தினாலும், மெய் முயற்சியினாலும் நீக்கிவிட்டு வண்டியினை இழுத்துச் செல்லுகின்றது. அது போலவே நல்ல முயற்சியினை மேற்கொண் ள்ேளவர்கள் செயல் புரியும்போது தடையாக வரும் இடுக்கண்களும் மறைந்து ஒடும். இடுக்கண்கள் தாமே இடர்ப்பட்டு மறையும் என்பதனைக் குறட்பா கூறு கின்றது. இடுக்கண் இடர்ப்பாடுடைத்து என்று முடிகின்ற குறட்பா சிறந்ததொரு கருத்தினை வெளிப் படுத்துகின்றது. தொழிலினை மே ற் கொண் டு செய்கின்றவர்கள் ஊக்கம் மிகுதியினால் வல்லவர்களாக இருத்தல் வேண்டும். - - - துன்பங்கள் மறையும் அப்படிப்பட்டவர்களை அடைந்த இடுக்கண் இடர்ப்பாடு உடையதாகும் என்று குறித்தார். -இடர்ப்பாடு உடைத்து’ என்பது இடர்ப்பாட்டினை :உடையதாகிவிடும் என்பதேயாகும். வல்லவர்களிடம் வந்த துன்பங்கள் தாமே துன்பத்தினையடைந்து மறுபடியும் அவர்களைச் சாராது என்பது குறிப்பாகும். முயற்சியினையுடைய வல்லவர்கள் பற்பல முறை களையும் பின்பற்றிச் செயல் புரிபவர்கள் ஆவார்கள். செயலினை மேற்கொள்ளும் காலத்தில் அவைகளை இடுக்கண்கள்தான் தடைப்படுத்தி நிறுத்துவதாகும். ஆதலால்தான் இடுக்கண்களை நீக்குவதில் வல்லமை பெற்றிருக்கவேண்டும் என்பதாயிற்று. - இந்த வல்லமையினை மனோ திடமும் ஊக்க மிகுதியும் அளித்து கிற்கும். பற்பல வழிகளிலும் மெய் வருத்தம் பாராது முயற்சி செய்தால் இடுக்கண்கள் தாமாகவே ஓடிவிடும் என்பதோடல்லாமல்