பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

自霍9 நல்ல தொழிலினை மேற்கொண்டு கடப்பவர்கள் மறதி உள்ளவர்களாக இருந்து விட்டால் கினைத்த காரியங்கள் கைகூடாமற் போகும்; செயல் புரிய முடியாது. எடுத்ததை முடிக்கும் திறமை இல்லாமல் போய்விடும். ஆதலால்தான் பொச்சாப்புடையவர்களுக் குப் புகழ் என்பதே இல்லை என்று கூறினார். மறதி புகழைக்கெடுக்கும் இவ்வுண்மையினை மிகப் பெரியதென்று சுட்டிக் காட்டவேண்டிய அரிய கருத்து ஒன்றினையும் ஆசிரியர் கூறுகின்றார். உலகத்தில் காணப்படும் நூல்கள் பல வகைப்படும். பற்பல துறைகளில் பல விதமான கருத்துக்களைக் கூறுகின்ற நூல்கள் மிகப் பலவாக உண்டு. கருத்து வேற்றுமைகளைப் பல வகைப்பட்ட நூல்களில் காணவும் முடிகின்றது. காலத்தினாலும் இடத்தினாலும் பிற காரணங்களி னாலும் ஒரே கருத்து எல்லா நூல் வகையினருக்கும் ஒத்திருத்தல் முடியாததாகும். ஆனால் எல்லா நூல் வகைப்பட்ட அறிஞர்களும் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரே கருத்தாக அமைந்து விடுகின்ற ஒன்றினை ஆசிரியர் இங்குக் குறித்தார். . . மறதி உள்ளவர்கள் புகழுடையவர்களாக இருக் கவே முடியாது என்பது பேருண்மையாகும். இப் பேருண்மையினை மேலும் வற்புறுத்த வேண்டி உலகம் முழுவதிலும் நிலவுகின்ற நூல் வகை அனைத்தையுமே ஆசிரியர் முன் கிறுத்திக் கூறுகின்றார். . . . . எல்லா நூல்களிலும் உறுதியாக, ஒப்ப முடிந்த தாகக் கூறப்பட்டுள்ள கருத்து, மறதி என்பது புகழி னைக் கெடுக்கும் என்பதேயாகும். பொச்சாப்பார்க்கு