பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இல்லை, புகழ்மை, அது உலகத்து - எப்பால் நூலோர்க்கும் துணிவு. தனிச்சிறப்பு - இக்குறட்பாவில் காண்ப்படுகின்ற தனிச்சிறப்பு உலகத்தினையே அமைத்துக் காட்டிக் கூறப்படுவ தாகும். பொச்சாப்பு என்பதை வைத்து குறட்பாவைத் தொடங்கித் தாம் கொண்ட கருத்தினை மேலும் வலி யுறுத்த அது என்கிற சொல்லினால் சுட்டிக் காட்டினார். - - - எப்பால் நூலோர்க்கும்’ என்று கூறியதால் அற: நூல், பொருள் நூல், என்பன போன்று குறிப்பிட்ட வகை நூல்களுக்கு மட்டும் இவ்வுண்மை என்று. கொள்ளாமல் உலகிலுள்ள பிற நூல்கள் எல்லா வற்றிலேயும் காணப்படுவதாகும் என்பது தெளிவு படுத்தப்பட்டது. - - - மறதியுடையவர்களுக்குப் புகழ் என்பது எக்காலத் திலேயும் வராது என்பதை நன்கு விளக்க வேண்டி - முக்காலத்திற்கும் பொருந்துவதாக இல்லை என்ற சொல்லினை வைத்தார். ஆதலால் போற்றிக் காப் பாற்றவேண்டிய பண்பு நினைவுஆற்றல் என்பதாகும். மறந்து விடுதல் என்கின்ற பழக்கத்தினை மறந்தும் கொள்ளாதே என்பது உய்த்துணர வைக்கப்பட்டது. உலகம் முழுமைக்கும் ஒப்ப முடிந்ததாகக் கொள் ளக் கூடிய கருத்துக்கள் பலவாக இருத்தல் முடியாது. சிற்சில உண்மைகளே எல்லா மக்களுக்கும், எல்லா காலத்திற்கும், எல்லா காட்டவர்க்கும் பொருத்தமாக இருக்க முடியும்.