பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 யில்லாத மனப்பக்குவமாகும். எதனையும் எண்ணி ஆராய்ந்து செய்தல் வேண்டும். நினைவு ஆற்றல் பெற்றவர்கட்கே பற்பல முறையில் எண்ணுதலும் சிந்தித்தலும் செயல்படுதலும் கூடும். ஆராய்ந்து அறிதலுழ் முடியும். எண்ணிச் செய்வதையும் ஆராய்ந்து செய்வதையும் போற்றிச் செயின்’ என்று. குறட்பா கூறுகின்றது. ஒரு செயலினைகன்கு ச்ெய்து முடிப்பதற்குக் கருவி என்பது இன்றியமையாத ஒன்று என்பது யாவரும் அறிந்ததாகும். நினைவு என்பதனுடைய சிறப்பினைக் கூறவேண்டி, மறதியில்லாத நினைவு அல்லது கினை வாற்றல் என்பதனைக் கருவி என்று அழைத்தார். பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின்’ என்று. குறட்பா ஒன்று முடிகின்றது. - - நினைத்தவை முடியும் என்றென்றும் பொச்சாவாக் கருவியினை மிகச் சிறந்ததாகக் கொள்ளுதல் வேண்டும். அப்படிக் கொண்டால் அந்த எண்ணம் மிகமிக உயர்ந்த நிலையினை ஒருவனுக்கு உண்டாக்கும். உலக வழக்கில் பேசுகின்றபொழுது முடியக் கூடிய காரியங்கள்? செய்து முடிக்க முடியாத காரியங்கள் என்று கூறுதல் வழக்கு. * , . . . . ஆசிரியர் வள்ளுவன்ார் நினைவு ஆற்றலின் பெருமையினை எவ்வளவுக்கெவ்வளவு உயர்த்தி வைத்துப் பேச வேண்டுமோ, அவ்வளவு உயரத்தில்