பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 போது அருமையாக இருக்கின்றதே என்ற அச்சமும் மலைப்பும் இருத்தல் கூடாது என்பதனைத் திண்ணமாகக் கூறுகின்றது. மனிதனுடைய மனம் மிகவும் சக்திவாய்ந்தது. எல்லாவற்றிற்குமே மனம் அடிப்படையாக அமைந்ததென்பது உலகறிந்த உண்மையாகும். அம்மனத்தினையே கருவியாகக்கொண்டு பலவற்றை யும் சாதித்து முடிக்கலாம். இயல்பில் மனிதனுக்கு ஒரு காரியம் மயக்கத்தினையும் மலைப்பினையும் கொடுக கிறது என்றால் அவன் மனத்தில் திண்ணிய கல்லியல்புகள் அமைந்தில்லாததே காரணமாகும். மனத்தளர்ச்சி கூடாது - - எக்காரியத்தையும் செய்து முடிப்பதற்கு அருமை பானதாக இருக்கின்றதே என்று எண்ணுதல் கூடாது. மேற்கொண்டுள்ள ஒரு செயலினை அருமை உடைய தென்று எண்ணிவிட்டால் மனத் தளர்ச்சி ஏற்பட்டு விடும். மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுத்துவிட்டால் முயற்சி செய்வதும் தடைபட்டுவிடும். - தம்முடைய சிறுமையை நோக்கிக் காரியத்தினைப் பெரிதாக எண்ணி மலைப்பதும் உண்டு. எத்தகைய காரியமாக இருந்தாலும ஆள்வினையுடைமை’ என்கின்ற விடாமுயற்சி வெற்றியினைத் தந்தே தீரும். எக்காரணத்தினாலும் எச்செயலைக் கண்டும் எக்காலத் திலும் அசாவாமை வேண்டுமென்று ஆசிரியா குறிப்பிட்டுக ... . கூறுகின்றார். அசாவாமை என்பது மனததளர்ச்சியில்லாமையென்பதே யாகும். - விடாமுயற்சி என்பது மனத் தளர்ச்சியினைப் போக்கும். மனத்தளர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு காரியம்