பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 25 அருமையானதாக இருக்கின்றதே என்று எண்ணுவதே அபாகும். மனத் தளர்ச்சியில்லாதவர்கள் மேற்கொண்ட தொழிலினைப் பெருமையாக முடிப்பார்கள். தளரா முயற்சியே தனிச்சிறப்பு தளரா முயற்சி பெருமை தரும். ஒரு செயலினைச் செய்து முடித்தல் பெருமையான காரியமாகும். அப்பெருமையினை முயற்சியானது உண்டாக்கித் தரும். அதனால்தான் எல்லாவற்றிற்கும் முதன்மை அயாக வைப்பதுபோல அசாவாமை வேண்டும் என்று கூறுகின்றார். - எழுச்சிக்கும், முயற்சிக்கும் மனமே காரணமாக் அமைந்துள்ளது. அம்மனத்தைக் கொண்டு உறுதி யாகச் செயல்படுவார்கள். ஒரு தொழிலினைச் செய்ய எண்ணியபொழுது செய்வதற்கு அருமையானதென்று இதனை நினைக்கமாட்டார்கள். அருமையுடைத் தென்று அசாவாமை வேண்டும் என்று தொடங்கப் பெறுகின்ற குறட்பா இவ்வுண்மையினை மெய்ப்பிக் கின்றது. . - அருமையான காரியம் என்று நினைப்பதற்குக் காரணங்கள் பலவாகவுண்டு. தம்முடைய அளவுக்கு மீறியதாயிற்றே என்று எண்ணிவிட்டால் முடித்து விடக் கூடிய காரியம் கூட முடிக்கமுடியாத அரிய காரியமென்று தோன்றிவிடும். அதனால்தான் அருமை புடைத்தென்று அசாவாமை வேண்டும் என்பதாகக் கூறினார்.