பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ம ன த் த ள ர் ச் சி க் கு இடம் கொடுக்காமல் தொழிலினை மேற்கொண்டு விட்டால் அதனை முடிப்பதற்குள்ள பெருமையை விடாமுயற்சியானது. கொடுத்துவிடும். செயலினை முடிப்பதில்தான் பெருமை. என்கின்ற சிறப்பு அடங்கி இருக்கின்றது. அருமை. உடைத்தென்று அசாவாமை வேண்டும்-பெருமை. முயற்சி தரும். அதுவே ஊன்றுகோல் - விடாமுயற்சியானது தொழிலினை முடிக்கின்ற பெருமையினைக் கொடுத்துவிடும் என்பதனை வற்புறுத்த வேண்டியே இக் குறட்பா பெருமை முயற்சி தரும்’ என்று முடிந்தது. இக் குறட்பாவில் முதற்கண் கூறப்பட்டுள்ள அருமை உடைத்து, என்பது சிந்திக்கத் தக்கதாகும். - - அசாவாமையினைக் கொண்டுவிட்டால் அரிய தொழிலும் எளிமையாகவே முடியும். மனிதனுக்குள்ள மனித மனத்திலுள்ள அருமையான ஆற்றலினை அறிந்து கொள்ளாத காரணத்தினால்தான் செய்" தொழிலில் மயக்கம் பலருக்கு உண்டாகி விடுகின்றது. ஒருவன் பால் இயல்பாகவே அமைந்திருக்கின்ற முயற்சி என்பதனுடைய அருஞ்சிறப்பினைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். முயற்சி என்பதனைப் போன்றதொரு, பேராற்றல் எதுவுமே இல்லை. மனிதன் மேன்மைக்கு முயற்சியே ஊன்றுகோலா கும். முயற்சி என்பது எளிதில் அறிந்து கொள்ள முடியாத தன்மை என்றே கூறலாம். என்றென்றும். வளரும் தன்மையிலுள்ளது முயற்சியாகும். செல்வப்