பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 27 பெருக்கிற்கு முதன்மையான காரணமாக அமைக் துள்ளது முயற்சியேயாகும். செல்வத்தினைத் தேடித் தருவதும், காப்பதும், வளர்ப்பதும் முயற்சியாகும். Tು ಖಗಹಿ முயற்சியே செல்வம் என்று கூறுகின்றபொழுது உலகியல் வழக்கில பேசப்படுகின்ற பொருட் செல்வம் என்பது மட்டுமல்ல. உலக வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்ற எல்லாவகையான செல்வங்களையும் முயற்சி கொடுத்தே தீரும். முயன்று தேடும் மனப்பண்பாடு: ஆறறிவு படைத்த மக்கட் பிறவிக்கே உண்டு. - மேலும் மேலும் ஓங்கி உயரக் கூடிய எண்ணங் . களையுண்டாக்குவது முயற்சியேயாகும். ஆதலால் தான் முயற்சி திருவினையாக்கும்’ என்று ஆசிரியர் மிகப் பெரிய கருத்தினைச் சுருக்கமாக அமைத்துக் காட்டினார். திருவினை’ என்பது ஒருவன் அடைய வேண்டிய செல்வத்தினை எல்லாம் குறித்தது. முயற்சி தான் செல்வத்தினை உண்டாக்கி வளர்ப்பதாகும். முயற்சியில்லையென்றால் மனிதத் தன்மை யிலிருந்து ஒருவன் தாழ்ந்தவனாகிவிடுவான். முயற்சி யில்லாதவன் மனித வாழ்க்கையினை கடததவும் Gipio tussol. - . - முயற்சியில்லாத குணம் வறுமையில் கொண்டு. வந்து விடும். முயறசியில்லாதவன் வறுமையடைவான் என்பது திட்டவட்டமான உண்மையாகும், என்பதை. வற்புறுத்த வேண்டியே குறட்பா ஒன்றில் புகுத்தி விடும்’ என்று கூறினார். அதாவது, வறுமையினை அவனுக்கு உண்டாக்கிவிடும். - - . . . . . .