பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வறுமையே இன்மை இல்லாத தன்மையினை இன்மை’ என்று கூறு .கிறார். ஒருவருக்கு இன்மை உண்டாகிவிட்ட தென்றால் அதற்குக் காரணம், முயற்சியின்மை' என்பதேயாகும். முயற்சி திருவினை யாக்கும்; முயற் றின்மை.இன்மை புகுத்திவிடும் முயற்சி செய்யாதிருப் பவன் வறுமையில் வாடியே திர வேண்டும் என்பது அறுதியிட்டுக் கூறப்பட்டது. எதுவுமே இல்லாதவன், துன்பத்திலும் வறுமை 1.யிலும். வாடுதல் இயல்பேயாகும். இன்மை’ என் பதனைப் பொதுப்படக் கூறி எதுவுமேயில்லாதவ னாகி விடுவான் என்பதும் குறிப்பாக உணர்த்தப் பட்டது. முயற்சியின்மைதான் ஒருவனுக்கு இன்மை யினைப் புகுத்திவிடுவதாகும். செல்வாக்குகளையெல் லாம் ஆக்கித் தருவது முயற்சியேயாகும். ஆத்லால் தான் முயற்சி ஆக்கும் என்றும் கூறினார். தானாகவே எதுவும் உண்டாகும் என்று எண்ணி யிருத்தல், அறியாமையாகும். ஆகும்படிச் செய்வதும் இல்லாதபடிச் செய்வதும் முயற்சி உடைமையாலும் இல்லாமையாலும் என்பதனை முறையே பகுத் துணர்ந்து கொள்ளுதல் வேண்டும். ஆதலால்தான் முயற்சியினை, முதன்மையாக வைத்து மிகப் பெரிய செல்வாக்கினை உண்டாக்கும் என்று கூறினார். பொருட் செல்வம் உலகியல் வாழ்க்கையில் செல்வங்களைப் பல துறைகளில் வைத்து வரிசைப் படுத்திப் பேசினாலும் பொருட் செல்வம் என்பது யாவருக்கும் சிறப்பாக