பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 31 குறிப்பிட்ட காரணங்களினால் ஒருவன் இகழப் படுகின்றானென்றால் அவன் எல்லோராலும் இகழப் படுகிறான் என்பது அன்று. ஆனால் பொருட் செல்வ மில்லாதவனோ எல்லோராலும் இகழப்படுவான். பொருளின்மையும் இகழ்ச்சியும் ஒரு தொழிலுக்குப் பெற்றிருக்க வேண்டிய ஆற்றல்களை ஒருவன் பெற்றிராவிட்டால் அவனுக்கு அது குறைவுதான். அப்படிப்பட்டவன் உலக மக்கள் எல்லோராலும் இகழப்படுவான் என்று கூற முடியாது. ஆனால் பொருளில்லாதவனோ எல்லா மக்களாலும் - இகழ்ந்தே பேசப்படுவான். பொருளிட்டல் வேண்டும் என்கிற உண்மையினை இவ்வாறெல்லாம் கூறினார். பொருட் செல்வம் பெற்றிருப்பவனிடம் எல்லோரும் தாமாகவே சென்று உயர்வினை அச் செல்வமுடைய வனுக்கு ஆக்கித் தருவர் என்பதை செய்வர் சிறப்பு" என்று கூறியதால் புலப்படுத்தினார். எல்லா மக்களாலேயுமே இகழப்படுகின்ற தன்மை யில் ஒருவன் வாழக் கூடாது. பொருளில்லாதவனை இகழ்தலும் பொருளுள்ளவனைச் சிறப்பித்தலும் இயல் பாகும. ஆதலால்தான் பொருள் இருப்பவனையும் பொருள் இலலாதவனையும் தெளிவாகக் காட்டுகின்ற முறையில் எல்லாரும் எள்ளுவர் என்றும், எல்லாரும் செய்வர் சிறப்பு’ என்றும் குறிப்பிட்டுக் காட்டினார். எல்லாரும் என்று பொதுப்படக் கூறினமையால் எள்ளுதல் செய்வதும் சிறப்புச் செய்வதும் உலக