பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 அறிந்து கொள்ள முடியாமலும் புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கின்ற பலவற்றையும் பொருட் செல்வம் தெளிவுபடுத்தி அறிந்து கொள்ளும்படியும் புரிந்துகொள்ளும்படியும். செய்துவிடும். தேசங்கள் என்பன ஆயிரக்கணக்கான கற்களுக்கப்பால் இருப் பவைகளாகும் என்ற உண்மை யாவரும் அறிந்ததே யாகும். - எண்ணிய தேசம் . . அப்படிப்பட்ட தேசங்களுக்குச் செல்லவேண்டு மென்றால் செல்லும் வழிகள் பலவாக இருக்கும். நிலத் தின் வழியும் நீரின் வழியும் வானத்தின் வழியும் பயணங்கள் நடைபெறுவதைப் பார்க்கின்றோம். மக்கள் செய்கின்ற பயணங்களையே இவ்வழிகள் காட்டுகின்றன. அப்படியெல்லாம் பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பன தேசங்களாகும். அங்கே யெல்லாம்கூட பொருட்செல்வம் சென்று வெற்றி யினைத் தேடித்தரும் என்று ஆசிரியர் கூறுவதைவிட பொருட் செல்வத்தின் சிறப்பினை வேறு எந்த வழியிலும் எந்த முறையிலும் கூற முடியாதென்றே சொல்லவேண்டும். ஆதலால், பொருட் செல்வத்தினைத் தேடுதல் எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பது வற்புறுத்தப்பட்டது. . . பகையினையும் ஒழிக்கும் என்று பொருட் செல்வத் தின் சிறப்பினைக் கூறிக் காட்டியதால் அறத்தினை யும் இன்பத்தினையும் அப்பொருட் செல்வம் எளிதில் அடையும்படிச் செய்யும் என்பதை உணர்ந்தோம். ஒருவன் இன்பமாக வாழவேண்டு மென்றால் அவன் பகைவர் இல்லாமல் இருந்தாகவேண்டும்