பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 என்பதைச் சுட்டிக் காட்டவே இருள் அறுக்கும் என்று: கூறிச் செல்வம் செய்யும் செயல்களில் அதனை முதன்மையாக வைத்துக் கூறினார். தொழில்களை மேற்கொண்டு செய்பவர்கள் பொருட் செல்வத்தினை கிறைய வைத்திருக்கவேண்டும். தொழில் செய்தல் என்பது மக்கள் வாழ்க்கையில் என்றென்றும் நிகழ்ந்தாக வேண்டிய ஒன்றாகும். ஆதலால்தான் பொருட் செல்வமும் என்றென்றும் இருக்கவேண்டும் என்ற குறிப்பினைப் புரிந்து, கொள்ளுதல் வேண்டும். தொழிலும் கையில் பொருளும் கையில் பொருளில்லாமல் தொழிலினைச் செய்ய முயல்பவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு என்றென்றும் அச்சமும் வருத்தமும் மனதில் இருந்து. கொண்டே இருக்கும். - - தன் கையில் பொருளில்லாமல் பிறரிடத்தில் இருக் கும் பொருளினை நம்பியும் கருதியும் தொழிலில் ஈடுபடு. பவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களும் அச்சமில் லாமலும் துன்பமில்லாமலும் தொழிலினைச் செய்தல் இயலாது என்பது குறிப்பிடப்ப்ட வேண்டியதாகும். எப்பொழுதும் தொழில் செய்பவர்கள் தங்கள் கையில், பொருளினை வைத்திருத்தல் வேண்டும். . அப்படிச் செய்ய முற்படுவானேயானால் எக்காலத் திலும் அவன் அஞ்சவேண்டியதில்லை. மற்றவர்களை ஏவி வேலையினைச் செய்து முடிப்பான். எக்காலத்