பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 1 39 திலும் மன அமைதி பெற்று இனிமையாக இருந்து செயலினைச் செய்து முடிப்பான். - தொழில் செய்கின்ற பொழுது எக்காலத்திலும் எதிர்பாராத இடையூறுகள் வருதல் நேரிடும். அக் காலங்களில் தொழிலை மேற்கொண்டுள்ளவன் வருத்தங்கொண்டு அச்சமுறுவான். தொழில் தடை படும் தன் கையில் பொருளினை வைத்துக் கொண்டு இருப்பவனுக்கு எந்த இடையூறும் துன்பத்தினைத் தராது. - - தன் கையில் பொருளில்லாமல் தொழிலினை மேற் கொண்டவன் அமைதியுடனிருப்பானென்றும் கூறவும் முடியாது. பொருட்செல்வம் அளிக்கும் மாபெரும் உதவியினை அருமையான உவமையின் மூலம் ஆசிரியர் வள்ளுவனார் எடுத்துர்ைக்கின்றார். .. யானைப்போர் யானைப் போர் என்பது யானைகள் ஒன்றோ டொன்று சண்டையிட்டுக் கொள்வதாகும். பழங் காலத்தில் மன்னர்கள் யானைப்போரின்ை கடத்தி வேடிககை பார்ப்பார்கள் என்றும் கூறுவதுண்டு. போர்க்களத்தில் போரிடுகின்ற போர்களை யானைப் போராக ஆசிரியர் குறிப்பிடவில்லை. இரண்டு யானைகள் போர் செய்கின்றன என்றால், அவைகள் கோபம் கொண்டு ஒன்றோடொன்று போரிடுகின்றன என்பதே பொருளாகும். - பார்ப்பதற்கு யானைப் போர் மலைப்பையும் வியப்பையும் தருவதாகும். யானைப்போர் பார்ப்பதற்கு அச்சத்தைக் கொடுக்கும். ஆதலால் யானைகள் போர்