பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 1 இருந்து யானைப்போர் காண்பவனை ஆசிரியர் கூறு .கின்றார். . யானைகள் குன்றின்மீது ஏறி வருதல் முடியாத ஒன்றாகும். எவ்விதமான அச்சத்தினையும் குன்றின் மீது கிற்பவன் கொள்ள மாட்டான். சிறிதளவுகூட அவனுக்கு மனக்கலக்கம் ஏற்படாது. முதலிலிருந்து கடைசி வரையில் இன்பமாகவும் மனநிறைவுடனும் அவன் யானைப் போரினைக் கானுவான். தன் கையில் பொருளினை வைத்துக் கொண்டு தொழிலினை மேற்கொண்டவன் குன்றின்மீது நிற்ப வனுக்கு ஒப்பாவான் என்பதாகும். தன் கையில் பொருளினை வைத்திருப்பவன் மற்றவர்களுக்குக் கட்டளையிட்டுத் தொழிலினைச் செய்து முடித்தலும் முடியும். l - குன்றின்மீது நிற்பவன் குன்றின்மீது கிற்பவன் மிகுந்த உயரத்தில் இருப்பவனாகின்றான். தன் கையில் பொருளிருக்குமே அயானால் அவ்வாறு பொருட் செல்வமுடையவன் உயர்க் திருக்கும் கிலையினைப் பெறுவான். தன் கைத்து’ என்று குறட்பாவில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பொருள் தன்னுடைய கையிலே இருக் தாக வேண்டும் என்பதாகும். அப்படிப்பட்டவன் ஒரு வினையினை மேற்கொண்டால் தட்டுத் தடையின்றிக் காரியத்தை முடிப்பான் என்பது உறுதியாகும். தன்