பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அருளிலார்" . பொருளிலார்’, அவ்வுலகம், இவ் வுலகம்' என்ற கருத்தினை வைத்துக் குறட்பா அமைக்கப்பட்டுள்ளதாகும். அருளிலார்க்கு அவ்வுலக மில்லை பொருளிலார்க்கு-இவ்வுலக மில்லாகி யாங்கு." பொருளினையும் இவ்வுலகத்தினையும் உதாரணமாகக் காட்டி அருளறத்தின்,சிறப்பினைக் கூறினார். இரண்டு முறையும் இல்லை’ என்று குறிப்பிட்டுத் தெளிவு பெறுமாறு உண்மையினைக் கூறினார். • உலகம் இல்லை என்று கூறப்படுவதெல்லாம் அந்தந்த உலகத்தில் இல்லையென்பதே பொருளாகும். பேரின்ப உலகம் என்பது அருள் உலகமாகும்; அருள் மயமானதாகும். அதுவே எல்லாமாகும். இவ் வலகம்" என்பது பொருளுலகமாகும். பொருளினால் கிலவி வருவதாகும். பொருட் செல்வத்தினாலே கடத்தப்பட்டு வருவதுமாகும். அருளும் பொருளும் பொருட் செல்வத்தினை விட அருட்செல்வத்தின் பெருமை சிறப்புடையது என்று உலக இலக்கணம் கூறும். அத்தகைய அருட்செல்வத்தினைச் சிறப்பித்துக் கூற வந்த ஆசிரியர் இவ்வுலகத்தின் பொருட் செல்வத் தினை முன்வைத்துக் காட்டினார் என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதொன்றாகும். பொருட்செல்வம் குறைக் து வருகின்ற் நிலைமை ஏற்பட்டாலும் மீண்டும் அப்பொருட் செல்வத்தினைப் பெருக்கி உயர்த்திக் கொள்ளுதல் முடியும். அருட் செல்வம் அப்படிப்பட்டதல்ல. அருளறத்தினின்று