பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வளர்ப்பவர்களாகவும் கொடை செய்பவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்பது உலகியற் கருத்தாகும். பொருட்செல்வத்தினை உடையவர்கள் ஈகைத் தன்மையுடைவர்களாக இருத்தல் வேண்டும் என்று கூறினாலும், அதற்கும் அளவு உண்டு என்பதை ஆசிரியர் கூறுகின்றார். பொருட்செல்வம்பெற்றவர்கள் பொருளினைப் போற்ற வேண்டுமென்றும் அதனைக் காப்பாற்ற வேண்டுமென்றும் கூறுகின்றார். வாகை என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய பண்பாட்டினை மக்கட் பிறவி எடுத்தவர்களெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பது சிறந்த பொன் னுரை யாகும். . . ஆனால் அப்படிப்பட்ட ஈகைத் தன்மையினையும் - அளவுடனே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பிறருக்குக் கொடுப்பதை சிறப்பான செயல் என்று சொன்னாலும் அளவறிந்து கொடுக்கவில்லை ெய ன் ற | ல் அது அறியாமையின்பாற்பட்ட செயலாகும். - அளவும் ஈகையும் பொருட் செல்வமுடையவர்கள் உ ல கி ல் அளவினைக் கருதுகின்றபொழுது பலவகையினராக இருத்தல் கண்கூடாகும். எல்லோருமே ஒரே வகையில் ஒரே அளவில் ஈகையைச் செய்தல் கூடாது. அவரவர் கள் தங்களுக்குள்ள அளவினைக் கருதியே ஈகையும் செய்தல் வேண்டுமென்று தெளிவுறுத்துகின்றார்.