பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 54 அளவு என்பது தான் வைத்திருக்கும் பொருட் செல்வத்தின் அளவை அறிந்து செலவு செய்ய வேண் டியதாகும். பிறருக்குக் கொடுக்கும் வழி என்பதைக் குறிக்க வேண்டிய குறட்பா ஆற்றின்’ என்று தொடங்: கிற்று. அதாவது கொடுக்கும் வழியினைக் கூறு. கின்றது என்பதேயாகும் ஆற்றின் அளவறிந்து ஈக. அது பொருள்-போற்றி வழங்கு நெறி.” - - வாழவேண்டிய வழிமுறைகளை அறிந்து வாழாத வன் வாழ்க்கை சீர்குலைந்துவிடும் என்பது தெளி வான உண்மையாகும். அளவறிந்து ஈதல் வேண்டும் . என்று கூறியதால் பொருளுள்ளவர்கள் அளவு கண்டு ஈகை செய்தேயாகவேண்டும் என்பது குறிப்பாக வைக்கப்பட்டது. ஈகை செய்யாதவன் அப்படி இருப்பதற்குக் காரண மாகப் பொருளைக் காப்பாற்றுகின்ற வழி என்று கூறு வானே யானால் அது அறிவில்லாத் தன்மையாகும். பொருளினைச் சேர்ப்பதற்குப் பல கல்ல வழிகள் இருப். பது.போல் அதனைக் காப்பாற்றுவதற்கும் கெறிகள் பலவுண்டு. - - ஈகை செய்தலும் அளவறிதலும் - பொருளினைப் போற்றி வழங்கும் நெ றியினை அறி யாதவன் தன்னுடைய தகுதிக்கு மீறி ஈகையினைச் செய்வான். அது தவறு. பிற செலவினங்களையும் மேற்கொள்ளுவான். ஈகையினைச் செய்தாலும் பிற செலவுகளைச் செய்தாலும் தனக்குள்ள பொருளின் அளவைக் சண்டே செய்தல் வேண்டும் என்பதனை