பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 3% வழி சிறியதாக இருக்கிறது என்பது அல்ல; அவரிடத்தி லிருந்து பொருள் போகும் வழி அகலமாகிவிட்டதுதான் கெடுதிக்குக் காரணமாகும். ~ வருகின்ற வழி சிறிது என்று கூறியதால் வரவும் செலவும் ஒத்திருந்தாலும் கெடுதி என்பதே குறிப்பாகும். செலவு செய்வதையே போகு ஆறு என்று கூறினார். குறட்பாவினை நன்கு சிந்தித்து உணர்தல் வேண்டும். ஆகுஆறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லைபோகுஆறு அகலாக் கடை. என்று வலியறிதலுக்குக் கூறியது பொருள் செயல் வகைக்கும் பொருந்தும். செலவு செய்யும் வழியினைச் சிறிதாக்கிக் கொள்ளும் பழக்கத்தினைப் பொருளுடையவன் பெற்றிருக்கிறான். ஆதலினால் பொருள் போகும் வழியினைச் சிறிதாக்கிக் கொள்ளுதல் அவனால் எளிமையாக முடிக்கப் படுவதொன்றாகும். பொருள் வைத்திருப்பவன் கையில் இருந்து பொருள் போவதே செலவுக்குரிய வழியாகையால் அதனை அளவிட்டுச் சுருக்கிக் கொள்ளுதல் பொருளுடையவனால் முடியும். • - வருகின்ற வழி என்று பேசுகின்ற பொழுது பிறிதோர் இடத்திலிருந்து பொருள் வர வேண்டியிருப்ப தால் வருகின்ற வழியினை விருப்பம்போல்பெரிதாக்கிக் கொள்ளுதல் எளிதானல்ல. - ஆனால் பொருள் தன்னிடமிருந்து போகும் வழியை விருப்பம்போல் சிறிதாக்கிக் கொள்ளவும் முடியும். முயற்சியினால், ஊ. க் க த் தி ன ல் , உழைப்பினால், அரிய மன எழுச்சியினால் சேகரிக்கப்