பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 62 என்கிற அறிவினை அவன் பெறாததால் இழிவான பிறவியுடனேயே சேர்த்து எண்ணப்படுகின்றான். பொருளினைச் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணி உழைத்து கல்ல முயற்சியினால் பொருளினை ஈட்டுகின்றபொழுது அப்பொருட் செல்வத்தினாலே தான் எல்லாம் கடக்கும் என்று உள்ளத்தில் கொண்டிருந்தான். • , - அப்படிக் கொண்டு பொருளினைச் சேர்த்த பிறகு, அச்செல்வத்தினால் ஆகவேண்டிய பயனை அறியாதவ னாக ஆகிவிட்டபடியால் அவனை மாணாப் பிறப்பு என்று கூறிவிட்டார். - எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது, எடுத்த மக்கட் பிறவிக்கு ஏற்றபடி மனிதத் தன்மையுடனே வாழ்தலாகும். பொருளானாம் எல்லாம் என்று குறிப்புக் காட்டி குறட்பா ஒன்று தொடங்கப் பெறுகின்றது. - அளவிட்டும், எண்ணியும் சொல்லிவிட முடியாதபடி -உலக கடைமுறையில் எல்லாவற்றிற்கும் பொருட் செல்வம் தேவை என்பதை எடுத்துக் காட்டவே பொருளானாம் எல்லாம்’ என்று கூறினார். அவ்வாறு பொருளின் சிறப்பினை அறிந்து அதனைச் சம்பாதித்த பிறகு இவறுதல் செய்தல் என்பது அறிவின்மையாகும். இவறுதல் கொடிய தீமை -இவறுதல் என்பது உலோபத் தன்மை என்பதைக் குறிக்கின்றது. ஈதல் என்பது வறியவர்