பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 பயனுள்ள செயல்களைச் செய்தே ஆக வேண்டும் - அடுக்கிய கோடி பெற்றிருப்பவன் எத்தனையோ பயனுள்ள செயல்களைச் செய்தாக வேண்டும். பெற்ற அச் செல்வத்தினால் நிலையான புகழினை நிலை கிறுத்துதல் வேண்டும். உலோபத் தன்மையுடன் வாழ்தல் கூடாது. இன்பத்தை கன்கு அனுபவித்தல் வேண்டும். - - அழியாத அரும் புகழினை நிலைநாட்டுவதற்குக் கொடுத்தல் என்பதே தலைசிறந்த வழியாகும். இத்தகைய இன்னும் இவை போன்ற எண்ணிறந்த பயனுடைய செயல்களை யெல்லாம் பெருஞ் செல்வம் படைத்தவன் செய்ய வேண்டியவனாக இருக்க, ஒன்றுமே செய்யாமல் இருப்பவனாகிவிட்டபடியால், ஒன்றுமே பயனில்லை என்று கூறி, இல்’ என்று குறட்பாவினை முடித்தார். - பயன் யாதுமே இல்லை என்பதாகும். இக் குறட்பாவில் கொடுப்பது என்பதை முன்வைத்தும், துய்ப்பது என்பதைப் பின் வைத்தும் அமைத்திருக்கும் முறை சிந்திக்கத் தக்கதாகும். - - அளவு கடந்த பொருளினைப் பெற்றிருக்கிறான் என்பதை, அடுக்கிய கோடி’ என்பதால் குறிப் பிட்டார். ஐம்புலன்களாலும் அனுபவிக்க வேண்டிய இன்பத்தைத் துய்ப்பது என்றும் கூறினார். எனவே தான் பொருட் செல்வத்தினைப் பெற்றிருந்தால் மட்டும் மனிதப்பிறவி பெருமையுடையதாகி விடாது என்பது குறிப்பாயிற்று. இதனால் பொருள் சம்பாதிப்பது மட்டும் ஒரு வனுடைய கடமை என்று எண்ணியிருத்தல் தவறு.