பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171. வெறுக்கப்படுபவன் மனிதப் பண்பாட்டினை, இயல்பாகவே இருக்க வேண்டிய தன்மை என்று வற்புறுத்தி, அன்பின் அடிப்படையில் வாழவேண்டும் என்பதனைக் குறித்துக் காட்டினார். இத்தன்மையினை அறியாமல் அன்பு என் கின்ற உயரிய பண்பாட்டினையே நீக்கி வாழ்பவன பலராலும் வெறுக்கப்படுவான். - பொருள் ஈட்டுவதினால் மிகுந்த துன்பங்களை அடைவான் என்பதே குறிப்பாயிற்று.நல்ல முறையில அச் செல்வத்தினைப் பயன்படுத்தாதவன பிறர் கொண்டு செல்லும் கொடும் துன் பத்திற்கு ஆளாகி விடுவான் என்பதுமாயிற்று. தொடர்பு இல்லாதவர்கள்செல்வத்தினைக்கொண்டு செல்வத்தால் செல்வம் படைத்தவன் எண்ணிய எண் னங்களெலலாம புழுதுபட்டனவாகிவிடும். ஆதலால் செலவத்தினை ஈட்டியவன் கலல முறையிலேயே அச்செலவத்தினைப் பயன் படுத்துதல் வேண்டும். - கயவர்கள் கூட்டம் அப்படிப் பயன் படுத்தாவிட்டால் கயவர்கள் கூட்டத்திலேயே அப்படிப்பட்டவனும் வைத்து எண்ணப்படுவான். மனிதத் தன்மை என்பது சிறிதேனும் இல்லாமல் மனிதத் தோற்றத்தை மட்டும் பெற்று வாழ்பவர்களே கயவர்கள்’ எனப்படுவார்கள். கீழ் மக்களாகக் கருதப்படுபவர்களே கயவர்கள் என்று குறிக்கப்படுபவர்களாவார்கள்.