பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சிறந்த மக்கட் பிறவிக்கு இருக்க வேண்டிய தன்மைகள் அவர்களிடம் இரா. . மனித உள்ளம் அவர்களிடம் காணப்படாது. மனிதர்களைப்போல அவர்கள் காட்டிக் கொள்வார்கள். பிறருக்கு உதவி செய்தல் என்கின்ற பண்பாடே அவர் களுக்குத் தோன்றாது. அவர்கள் பிறரால் கொடுமைப் படுத்தப்பட்ட பொழுது நற்செயல்களைச் செய்யும் கிலைக்கு வருவார்கள். ஈகைத்தன்மை என்பதையே அவர்கள் எண்ண. மாட்டார்கள். கயவர்களும் செல்வம் படைத்தவர்களாக இருத்தல் கூடும். தாமாகவே நற்செயல்கள் செய்யும் சிந்தனை அவர்களுக்கு வராது. சான்றோர்கள் எனப்படும் பெரியவர்கள் மற்றவர்களுக்கு இயன்றவரை கொடுத்து உதவுவார்கள். ... இப்படிப்பட்டவர்களுக்கு முற் றிலும் மாறான போக்கினைக் கொண்டவர்கள் கயவர்கள் ஆவார்கள். அடுத்து கொடுமை செய்யக் கூடிய நிலையிலும் கயவர்கள் தங்களை வைத்துக் கொள்வார்கள். கரும்பினை நசுக்கிச் சாற்றினைப் பிழிவதுபோல கயவர்களை நடத்தினால்தான் அவர்கள் பயன் படுவார்கள். - ; விதிரார் தாம் சர்ப்பிட்ட கையினைக்கூட யாசிப்பவர்களுக் குத் தெறிக்கமாட்டார்கள். அதாவது யாசிக்கின்ற பிச்சைக்காரர்களுக்குக்கூட கடுகளவேனும் இரக்கம்