பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தான் அவர்களிடம் எவ்வாறு கடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியும். . - கயவர்களைக் கொடுமைப்படுத்தி அக்கயவர் களைப் பொருள் கொடுக்கும்படிச் செய்பவர்களே ககூன்கையர்” என்று குறிக்கப்பட்டார்கள். அறம் செய்தல் வேண்டும், ஈகைத்தன்மை வேண்டும், மனிதப் பண்பாடு வேண்டும் என்பவைகளை எல்லாம் கயவர்கள் உணர்ந்து கொள்ளும்படிக் செய்கின்ற வழியின்ை ஆசிரியர் தெளிவாகப் புலப்படுத்தினார். - கொடிறு உடைக்கப்படுவார்கள் கொடிறு உடைப்பவர்கள் என்று கூறப்படுகின்ற. ஆசிரியரின் கருத்து சிந்திக்கத் தக்கது. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்-கூன்கையர் அல்லாதவர்க்கு என்ற குறட்பா கயவர்கள் வாழ்கின்ற. வாழ்க்கை முறையினைக் குறிப்பிடுகின்றது. கூன்கையராகிக் கொடுமை செய்பவர்களுக்குக் கயவர்கள் கொடுத்து உதவுவார்கள் என்றும் மற்றவர் களுக்குக் கொ டு க் க ம | ட் டா ர் க ள் என்பது - அல்லாதவர்க்கு என்ற குறிப்பு உணர்த்திற்று. இப்படிப்பட்ட கயவர்கள் மக்கள் கூட்டத்தில் வாழ்வதற்கே உரிமையற்றவர்கள் என்பதும் பெறப் பட்டது. - -