பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 ஆசிரியர் குறிப்பிடுகின்றார். வடுக்கான வற்றாகும் கழ்"என்று ஒரு தொடரினைக் குறட்பாவில் அமைத்துக் காட்டுகின்றார். குற்றத்தினை உண்டாக்கிக் காட்டுவதில் வல்லவர் களாக இருப்பார்கள் என்பதே இதன் பொருளாகும். கீழ் மக்களுடைய இழிகுணமான படியால் அக்குறட்பா கீழ்" என்று முடிந்தது. கீழ்மக்களின் உள்ளத்தினை வற்புறுத்தி எடுத்துக் காட்டினார். இருக்கின்ற குற்றத்தினை எடுத்துக் கூறுதல் என் கின்ற பழக்கம் கயவர்களிடம் உண்டு என்பதாகக் கூறாமல் இல்லாத குற்றத்தினைக் கற்பித்துக் கூறு கின்றவர்கள் கயவர்கள் என்கின்ற உண்மையினைச் சிந்தித்தல் வேண்டும். கற்பனை செய்தே பேசுவார்கள் மற்றவர்கள் உண்டும் உடுத்தியும் வாழ்வதே கயவர்களுக்குக் காணப் பொறுக்காததாகும். எனவே தான் பொறாமைக் காரணத்தினால் அப்படிப்பட்டவர் களைக் கண்டவுடனே அவர்கள்மீது குற்றங்களைக் கற்பிப்பது கயவர்களின் இயற்கையான கீழ்க் குணமாயிற்று. . . . . . . . . கயவர்கள் நல்ல மக்களுக்கும் மாசு உண்டாகும் படிச் செய்வதையே தங்களின் குணமாகவும் பழக்க மாகவும் கொண்டிருப்பவர்களாவார்கள். இவ்வுண்மை யிேனைக் குறட்பா மிக அழகாகக் கூறுகின்றது.