பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 80 உடுப்பது உம் உண்பது உம் காணின் பிறர்மேல் -வடுக்கான வற்றாகும் கீழ்'. மற்றவர்கள்மீது குற்றங்களைக் கற்பித்துக் கூறுவதையே தொழிலாகக் கொண்டு அத்தொழிலில் வன்மை பெற்றவர்கள் கயவர். களாவார்கள். நன் மக்களுக்குப் பிறர் மீது குற்றங். களைக் கற்பித்துக் கூறத் தெரியாது. கயவர்களுக்குத் தான் இச்செயல் முடியும். இல்லாத குற்றங்களைக் கயவர்கள் தாமே கண்டு பிடித்துக் கூறுவார்கள் என்பதனைக் காண என்ற சொல் குறித்தது. வடு என்பது குற்றமாகும். உடுப் பதையும் உண்ணுவதையும் கண்ட மாத்திரத்திலேயே கயவர்கள் மனம் பொறாதவர்களாக ஆகிவிடுவார் களென்றால் இன்னும் மற்றச் சிறப்புக்களுடனே பிறர் வாழ்ந்தால் கயவர்கள் எப்படி நடந்து, கொள்வார்கள் என்பது சிந்தித்து உணர வேண்டிய தாகும். குற்றம் கற்பித்தல் மக்களுக்கு இயல்பாக இருக்க வேண்டியவைகள் உடுப்பதும் உண்பதுமாகும். இவைகளைக் கண்டாலே அழுக்காறு கொள்ளுகின்ற கயவர்கள் மக்கள் கூட்டத் திற்கே எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பது கருதப் படவேண்டியதாகும். - - - மற்றவர்களைக் கண்ட மாத்திரத்திலேயே கயவர்கள் பொறாமைப் படுவார்கள் என்கின்ற துணுக்கத்தினைக் கூறவேண்டியே காணின்' என்று அமைத்தார். இல்லாத குற்றத்தைப் பிறர் மீது ஏற்றிக் கூறினால் எல்லோருமே நம்பி விடுவார்கள் என்று கூற முடியாது. - : , . * :