பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 - இருந்தாலும் நம்பி விடும்படி கயவர்கள் செய்து விடுவார்கள் என்பதற்காகவே அப்பழக்கத்தில் வன்மை பெற்றவர்கள் என்று கூறி, வற்றாகும் கீழ் என்று அமைத்தார். பிறரிடத்தில் சிறிய செல்வமிருந்தாலும் கயவர்கள் பொறாமைப்படுவார்கள் என்பதை இக்குறட்பாவினால் உய்த்துணர வைத்தார். மக்களே போல்வர் என்று கயவர்களை ஆசிரியர் குறிக்கின்றார். கயவர்களாகிய கீழ்மக்கள் வடிவத்தினால் ம க் க ள் ேப ா ன் று இருப்பார்கள். - உவமை இல்லை மனிதத் தன்மையினால் மக்களாக இருக்க மாட்டார்கள். எனவேதான் மக்களைப் போல இருப்பார் களென்று ஆசிரியர் கூறினார். அப்படிப்பட்ட கயவர் களுக்கு ஒப்புவமை கூற வேண்டுமென்றால் அக்கயவர் களையேதான் கூறவேண்டும். ஏ. .ெ ன ன் றால் அவர்களை ஒத்தவர்கள் வேறு யாருமே இல்லை என்பது ஆசிரியரின் கருத்தாகும். . மக்கள் கூட்டத்திலிருந்து தனியாகவே பிரித்து வைத்துப் பார்க்கவேண்டியவர்கள் கயவர்களாவார்கள். கயவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் அவர்களை ஆசிரியர் வள்ளுவனார் கீழ்மக்கள் என்று கூறி அமைக்கின்றார். t எல்லா வகையிலும் கீழானவர்கள் என்பதே குறிப்பாகும். அவர்களுக்கு ஒப்பாகக் கூறவேண்டிய வர்கள் யாருமே இல்லை. குறட்பாவில், யாம் கண்டதில் என்பதாக வெளிப்படையாகவே கூறு கின்றார். 12-. له